உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2023-05-15 17:57 GMT

 குடியாத்தத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நேற்று நடந்தது. இந்த விழாவையொட்டி வேலூர் மாவட்டத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஏராளமாக பக்தர்கள் குடியாத்தத்தில் குவிந்தனர். இந்த விழாவில் ஏராளமான தற்காலிகமாக ஓட்டல்கள், தின்பண்ட கடைகள் அமைக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதையொட்டி வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருவிழாக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓட்டல்கள், பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ள அன்னதானம் உள்ளிட்டவற்றில் மாதிரி உணவினை ஆய்வுக்கான எடுத்தனர். அதை நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அங்குள்ள கடைகளில் விற்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்களில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா? காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தனர். இதில் தரமற்ற உணவு விற்பனை செய்ததாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஒரு ஓட்டலுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்