காயல்பட்டினத்தில் தொழில்முனைவோருக்குஉணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி:வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது
காயல்பட்டினத்தில் தொழில்முனைவோருக்குஉணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி, வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது
காயல்பட்டினத்தில் தொழில் முனைவோருக்கு உணவு பதப்படுத்துதல் பயிற்சி வருகிற29-ந் தேதி தொடங்குகிறது.
இது குறித்து மத்திய கதர், கிராம தொழில்கள் இயக்குனர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
உணவு பதப்படுத்துதல் பயிற்சி
மத்திய கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பனைவெல்லம் மற்றும் பனை பொருட்கள் நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி காயல்பட்டினம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள விக்டரி பயிற்சி மையத்தில் வருகிற 29-ந் தேதி முதல் 2.09.23 வரை 5 நாட்கள் நடக்கிறது. பயிற்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடக்கிறது.
பயிற்சியில் சாம்பார்பொடி, ரசப்பொடி, வத்தல் குழம்பு மிளகாய்பொடி, மட்டன் பொடி, சிக்கன் பொடி பிரியாணி பொடி, மீன்மசாலா, செம்பருத்தி ஜூஸ், பூண்டு, நெல்லிக்காய், நார்த்தங்காய், மாங்காய் ஊறுகாய், பாதாம் மில்க், ஒரிஜினல் மேங்கோ ஸ்குவாஷ், உடனடி ரோஸ்மில்க், சாக்லேட்மில்க், கிரேப்ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், ஜிகர்தண்டா உள்ளிட்ட உணவு பதப்படுத்துதல் மற்றும் செய்முறைகள் நேரடியாக செய்து காண்பிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் தொழில் முனைவோர்களும், கல்லூரி மாணவ, மாணவிகள், இல்லத்தரசிகள் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு சொந்தமாக தொழிலை ஆரம்பித்து மாதம் ரூ.50 ஆயிரம் வரை வருமான பெற்று பயன்பெற இந்த பயிற்சி உதவுகிறது.
முன்பதிவு
இந்த பயிற்சியில் 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், ஒரு புகைப்படம் கொண்டு வர வேண்டும். பயிற்சிக்கு பிறகு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திடடத்தின் கீழ் மத்திய அரசின் மானியத்துடன் கூடிய 25 சதவீதம் மற்றும் 35 சதவீதம் வங்கி கடன் பெற்று தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இந்த நல்ல வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு 98401 58943, 73731 41095 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.