பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்

இந்து மக்கள் கட்சி சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.

Update: 2023-02-05 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி ஒன்றிய அனுமன் சேனா சார்பில் திருச்செந்தூர் பிரசாத் நகரில் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு மாநில பொதுச்செயலாளர் ரவி கிருஷ்ணன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனுமன் சேனா தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் தங்கராஜ், ஒன்றிய தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்