சென்னையில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம்...!
சென்னையில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் மார்கழி மாதம் பொதுவாக பனிமூட்டம் இருப்பது இயல்பான ஒன்று என்றாலும் தற்போது மார்கழி மாதத்திற்கு முன்பே பனிமூட்டம் நீடித்து வருகின்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. சென்னையில் அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம், ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
வளசரவாக்கம், போரூர், ராமாபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம் அருகே பொத்தேரி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது. மேலும் அரக்கோணம் - சென்னை செல்லும் ரெயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.