தரைப்பாலத்தை மூழ்கடித்த நுரை போக்குவரத்து துண்டிப்பு

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரைப்பாலத்தை நுரை மூழ்கடித்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-26 19:00 GMT

ஓசூர்:-

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வினாடிக்கு 668 கன அடிநீர் வந்த நிலையில் நேற்று வினாடிக்கு 1,687 கனஅடிநீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,220 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

இதனிடையே அணை நீரில் ரசாயன கழிவுகள் கலந்து வெளியேறுவதால், தென்பெண்ணை ஆற்றில்வெள்ள பெருக்குஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஓசூர் - நந்திமங்கலம் சாலையில் தட்டகானப்பள்ளி தரைப்பாலம் நுரையால் மூழ்கியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் முத்தலாலி, தட்டகானப்பள்ளி, நந்திமங்கலம் கிராம மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மாற்றுப்பாதையில் பயணிக்குமாறு பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்