தேவதுர்க்கை அம்மன் கோவிலில் பூச்சொரிதல்

நவராத்திரி விழாவையொட்டி தேவதுர்க்கை அம்மன் கோவிலில் பூச்சொரிதல் நடந்தது.

Update: 2023-10-15 18:45 GMT

கீழ்வேளூர் அருகே தேவூரில் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக தேவதுர்க்கை அம்மனுக்கு மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பூத்தட்டு கொண்டு வந்து தேவதுர்க்கை அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். வருகிற 23-ந்தேதி நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகா சண்டி யாகம் மற்றும் சரஸ்வதி மகா யாகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி விஜயேந்திரன் சாமிகள் செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்