பூக்களின் விலை கடும் உயர்வு - மதுரை மல்லிகை ரூ.1,800-க்கு விற்பனை

பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Update: 2022-08-31 19:02 GMT

மதுரை,

நாடு முழுவதும் நேற்று(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதே சமயம் முகூர்த்த நாட்களும் அடுத்தடுத்து வருவதால், பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களின் தேவை அதிகரித்ததால் மார்க்கெட்டில் பூக்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் மதுரை மல்லிகை ஒரு கிலோ ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி மலர் வணிக வளாகத்தில் பிச்சிப்பூ, முல்லைப்பூ ஆகியவை ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த விலையேற்றம் அடுத்த ஓரிரு நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்