சாலைகளில் வெள்ளப்பெருக்கு

கள்ளக்குறிச்சியில் பலத்த மழை சாலைகளில் வெள்ளப்பெருக்கு

Update: 2023-01-31 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. பின்னர் மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை லேசான மழை பெய்தது. தொடர்ந்து இரவு 7 மணி முதல் மழையின் வேகம் அதிகரிக்க இரவு 9 மணி வரை பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இதன் பிறகு மழை விட்டு விட்டு பெய்தது.

இந்த மழையால் நகரின் பிரதான சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. குறிப்பாக காந்தி ரோடு, சேலம் மெயின் ரோடு, துருகம் சாலை ஆகிய சாலைகளில் மழைநீருடன், கழிவுநீர் இரண்டற கலந்து பெருக்கெடுத்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. இதேபோல் கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்