கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
கடலூர்,
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வீரன்கோவில்திட்டு கிராமம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அந்த கிராமத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
கிராமத்திற்கு செல்லும் கான்கிரீட் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாதல், சுமார் 5 கி.மீ. சுற்றி வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
வெள்ளநீர் சூழ்ந்துள்ள கிராமத்தில் வசித்து வரும் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு புயல், வெள்ள பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.