தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீர்வரத்தை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு 2 அமைச்சர்கள் உத்தரவு

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் நீர்வரத்தை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு 2 அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளாா்கள்.

Update: 2022-08-31 17:01 GMT


விழுப்புரம் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது ஆற்றின் கரையோர பகுதிகளில் மண் அரிப்பு மற்றும் உடைப்பு ஏற்படாதவாறு தடுக்க மணல் மூட்டைகள், கருங்கற்கள் கொண்டு தடுப்பு அமைக்கும்படியும், குடியிருப்புகள், விவசாய நிலங்களில் மழைநீர் செல்லாத வகையில் நீரின் வழித்தடத்தை அமைக்கும்படியும், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் ஆற்றின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து அதற்கு தகுந்தாற்போல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பகுதியில் புதிய தடுப்பணையும், உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு தேவையான திட்ட அறிக்கையை தயார் செய்யும்படியும் பொதுப்பணித்துறையினருக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அய்யப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்