திருப்பூரில் பலத்த மழை; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

திருப்பூரில் பலத்த மழை; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

Update: 2022-08-19 13:59 GMT

வீரபாண்டி,

திருப்பூரில் பெய்த பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

பலத்த மழை

தமிழக முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூரில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கொட்டித்தீர்த்த மழையால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலையின் நடுவே மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளை கடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

திருப்பூர்-மங்கலம் சாலை தாடிக்கார மூக்கு பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, மழைநீருடன் கழிவு நீர் கலந்து சாலையின் நடுவே தேக்கமடைந்தது. மேலும் தேக்கமடைந்த சாக்கடை கழிவுயால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதேபோல் இடுவம்பாளையம் 40-வது வார்டு காமாட்சி நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் கடைப்பு ஏற்பட்டு கழிவுநீர், அப்பகுதியில் உள்ள 6 வீடுகளுக்குள் புகுந்தது. கழிவு நீரை அப்புறப்படுத்தும் முயற்சியில் குடியிருப்பு வாசிகள் ஈடுபட்டனர். மேலும் இடுவம்பாளையம் செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் மழை நீரானது குளம் போல் தேங்கியணத. இதனால் அப்பகுதி வழியாக செல்லக்கூடிய பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டுகள் என பலரும் அவதிப்பட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்