சிங்கப்பூர், சென்னை விமானங்கள் தாமதம்
சிங்கப்பூர், சென்னை விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மாலை 6.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். இந்த நிலையில் நேற்று இரவு 4 மணி நேரம் தாமதமாக இரவு 10.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இதேபோன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு இரவு 8.45 மணிக்கு வந்து சேர வேண்டிய இண்டிகோ விமானம் இரவு 10.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. தொழில்நுட்பக் காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் விமானங்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.