மீன்பிடி துறைமுகத்தை தூர்வார வேண்டும்- மீனவர்கள்

செம்பியன்மகாதேவிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை தூர்வார வேண்டும் என அமைச்சருக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-05-31 18:52 GMT

செம்பியன்மகாதேவிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை தூர்வார வேண்டும் என அமைச்சருக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சரிடம் மனு

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சேதுபாவாசத்திரம் அருகே உள்ள செம்பியன்மகாதேவிப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

செம்பியன்மகாதேவிப்பட்டினம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் மீன் பிடி தொழில் செய்து வருகிறோம். சுமார் 200 குடும்பங்கள் மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகிறோம். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் மீன்பிடி துறைமுகம் பாசியும், சேறுமாக 500 மீட்டருக்கு மேல் தூர்ந்துவிட்டது.

செம்பியன்மகாதேவிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை தூர்வார வேண்டும் என அமைச்சருக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.செம்பியன்மகாதேவிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை தூர்வார வேண்டும் என அமைச்சருக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் மீனவர்கள் கடலுக்கு சென்று நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடித்து விட்டு கரை வந்து சேர முடியாமல் சிரமப்பட்டு வருகிறது. 500 மீட்டருக்கு மேல் படகை கடலில் நிறுத்திவிட்டு, பிடித்து வரும் மீன்களை தலையில் சுமந்து பாசி சேற்றில் நடந்து வந்து கரை சேர வேண்டிய நிலை உள்ளது.

தினந்தோறும் மீன்பிடித் தொழிலில் செய்து வருகிறோம். துறைமுகத்தை தூர்வாரி தருமாறு பல ஆண்டுகளாக அரசுக்கு மனு கொடுத்தும் இதுநாள் வரை துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரி தரவில்லை. துறைமுகத்தில் வாய்க்கால் வெட்டி தருவதாக கூறி சென்னையிலிருந்து பொறியாளர் 2019-ம் ஆண்டு ஆய்வு செய்து சென்னை மீன்துறை இயக்குனருக்கு தஞ்சாவூர் மீன்வளத் துறை உதவி இயக்குனர் மூலம் ஆய்வு அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே மீனவர்களின் சிரமத்தை நீக்க துறைமுக முகத்துவாரத்தை தூர்வார வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்