ஆதார், ரேஷன் அட்டைகளை சாலையில் கொட்டி மீனவர்கள் போராட்டம் - புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி மாநிலம் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில், மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-10-26 15:23 IST

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் பிள்ளைச்சாவடி மீனவ கிராமங்களை கடல் அரிப்பில் இருந்து தடுப்பதற்காக தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இந்த இரு கிராமங்களுக்கு இடையேயான தமிழக மீனவ பகுதி பிள்ளைச்சாவடி.

புதுச்சேரி பகுதியில் தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் தமிழக மீனவ பகுதியில் கடல்நீர் உட்புகுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் அந்த பகுதியிலும் கற்கள் கொட்ட வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று இரவு கடல் சீற்றத்தால் 3 வீடுகள் சேதமடைந்தன.

இந்த நிலையில், கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்ட வலியுறுத்தி புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆதார், ரேஷன் அட்டைகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டைக்குப்பம் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தால் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Tags:    

மேலும் செய்திகள்