மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறையில்மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது
மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் வருகிற ஜூன் 1-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அடங்கிய மனுக்களை மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.