மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

Update: 2023-09-05 19:00 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் உள்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் சீற்றமாகவும் காணப்படுகிறது. இதனிடையே வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று தொடர்ந்து 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்