தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை

ராமேசுவரம் அருகே தன் சாவுக்கு போலீஸ்தான் காரணம் எனக்கூறி வீடியோ பதிவிட்டு மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-08 18:45 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தன் சாவுக்கு போலீஸ்தான் காரணம் எனக்கூறி வீடியோ பதிவிட்டு மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் வாகன சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் புதுரோடு பகுதியை சேர்ந்தவர் நம்புகுமார் (வயது 30). மீனவர். இவரது மனைவி நித்யா(24). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. நம்புகுமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும், அந்த பெண்ணுடன் கோவையில் சில மாதங்கள் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த பெண் கோவையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நம்பு குமார் குடிபோதையில் தனுஷ்கோடி, நடராஜபுரம், புதுரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்தாராம். இவ்வாறு குடிபோதையில் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த நம்புகுமாரை தனுஷ்கோடி போலீசார் வாகன சோதனையின் போது நிறுத்தி விசாரித்தனர்.

மீனவர் தற்கொலை

மேலும் அவர்கள் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்து, ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்துவிட்டு வாகனத்தை பெற்று செல்லுமாறும் நம்புகுமாரிடம் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அவர் ஆவணங்களை கொண்டு வரவில்லை. இதனிடையே ராமேசுவரம் நடராஜபுரம் பகுதியில் உள்ள குடிசை ஒன்றில் நேற்று அதிகாலையில் மீனவர் நம்புகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், தன் சாவுக்கு போலீஸ்தான் காரணம் என்றும், தன் மோட்டார்சைக்கிளை தராமல் இருந்ததாகவும் கூறி வீடியோ ஒன்றையும் பதிவிட்டும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனுஷ்கோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்