ஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்...!

ஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-12-05 08:35 GMT

மதுரை,

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதனை புரிந்து வருவது வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் சோப்தார் பணியில் முதல் முறையாக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிபதியுடன் செங்கோல் ஏந்தி செல்லும் சோப்தார் பணியில் மதுரை ஐகோர்ட்டை பொறுத்தவரை ஆண்கள் மட்டுமே வகித்துவந்தனர். அவர்கள் சீருடையாக வெள்ளை நிற ஆடையும், சிவப்பு நிற தலைப்பாகையும் அணிந்து இருப்பார்கள்.

தற்போது முதல் முறையாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் சோப்தார் பணியில் லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்