விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி - பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
சென்னை,
மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை 13 மணி நேரத்தில் பாடும் சாதனை நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை நளினி, நடிகை வடிவுக்கரசி, நடிகர் கிங்காங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு வர வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் நேரில் சென்ற அழைக்க இருக்கிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.