3 மாவட்டங்களில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் - பெரம்பலூரில் ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி செல்கிறார்.
சென்னை,
திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி செல்கிறார்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளையும், 29ம் தேதியும் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் அமைச்சர் செல்லும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.