2 நாள் பயணமாக மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டைக்கு செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டைக்கு செல்கிறார்.
சென்னை,
2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை செல்கிறார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்கிறார். அங்கு செல்லும் முதல்-அமைச்சர் மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
அதனை தொடர்ந்து நாளை மறுநாள் 8-ந் தேதி சிவகங்கை வேங்கைப்பட்டியில் சமத்துவபுரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அதன் பின்னர் புதுக்கோட்டை செல்லும் முதல்-அமைச்சர் அங்கு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்ற உள்ளார்.