திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய புதிய கட்டிடம் திறப்பு எப்போது
திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய புதிய கட்டிடம் திறப்பு எப்போது என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய புதிய கட்டிடம் திறப்பு எப்போது என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திருப்பூர் குமார்நகரில் வடக்கு தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் குமார்நகர் பகுதியில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலகமும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய வளாகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலகம் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையம் என ஒருங்கிணைந்த கட்டிடம் கட்ட ரூ.2 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. பணிகள் முடிந்து ஒரு சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் புதிய கட்டிடம் இன்னும் திறக்கப்படவில்லை. திறப்பு விழாவுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலமாக திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது. திறப்பு விழா தேதியை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்று தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.