தீபாவளி நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்- தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வலியுறுத்தல்

தீபாவளி நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-10-20 19:27 GMT

தீபாவளி நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரவை கூட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், செயலாளர் முத்துகுட்டி, நெல்லை மாவட்ட தலைவர் ராஜசேகர், செயலாளர் ஜெபகுமார், பொருளாளர் முகமது ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இது சுதேசி தயாரிப்புகளையும், சுதேசி வர்த்தகத்தையும் முடக்கும் செயல் ஆகும். ஆண்டு முழுவதும் நடைபெறும் ஒரு தொழிலை, அதில் கிடைக்கும் பலனை 2 மணி நேரத்தில் அனுபவித்து விட வேண்டும் என்ற கட்டுப்பாடு கொடுமையானது. எனவே முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு தீபாவளி பண்டிகை அன்று நாள் முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

வரி விலக்கு அளிக்க வேண்டும்

மத்திய அரசு அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளனர். உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க வேண்டும். விவசாயத்துக்கு மின் கட்டண சலுகை வழங்குவது போல் சிறிய வணிகர்களுக்கும் மின்கட்டண சலுகை வழங்க வேண்டும். வணிகர்களுக்கும் அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம், அன்னிய பொருளாதாரம் போன்ற வர்த்தகங்களுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்தி, சுதேசி வணிகர்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், ஓட்டுனர் அணி சிவந்தி சங்கர், மாவட்ட கவுரவ தலைவர் பிச்சை ராஜ், மாநகர தலைவர் வாகை மணி மற்றும் மூலைக்கரைப்பட்டி செல்வன், டவுன் உதயகண்ணன், வள்ளியூர் ரிஷி பாண்டியன், ஏர்வாடி வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்