பட்டாசு திருடியவர் கைது

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-11 18:39 GMT

தாயில்பட்டி, 

வெம்பகோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்புக்கனி (வயது 40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பனையடிப்பட்டியில் உள்ளது. அச்சங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் (24) பட்டாசு ஆலையில் இரவு நேரத்தில் அறையில் இருந்து 150 பெட்டி தரை சக்கர வெடிகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்