பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் படுகாயம்

சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன.

Update: 2022-05-23 18:02 GMT

சாத்தூர்

சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன.

பட்டாசு ஆலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 45). இவருக்கு சாத்தூர் தாலுகா மேட்டமலையில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது.. இத்தொழிற்சாலையில் நாக்பூரில் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகளை தயார் செய்துவந்தனர். இந்தநிலையில் நேற்று காலை இந்த ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் காலை முதல் மாலை வரை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருந்தனர். அப்போது பட்டாசுக்கு தேவையான திரிகள் தயார் செய்யும் போது மருந்தில் உராய்வு ஏற்பட்டது.

அறைகள் தீப்பிடித்தது

இதில் அவை தீப்பற்றி எரிந்ததில் அறையில் வேலைபார்த்து கொண்டிருந்த சின்னகாமன்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் (50) என்பவர் படுகாயம் அடைந்தார். மேலும் இந்த தீ அருகில் இருந்த அறைகளுக்கும் பரவியது. இதனால் மேலும் 3 அறைகளில் காய வைக்கப்பட்டிருந்த திரிகளும் தீப்பிடித்து எரிந்தன.

விசாரணை

அறையில் தீப்பிடித்ததில் சிக்கிய தொழிலாளி பாண்டியராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்