தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு ஒத்திகை

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.

Update: 2023-09-16 18:45 GMT

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா ஒருங்கிணைப்பில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது. இதில் திடீர் தீவிபத்து நேரத்தில் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை எவ்வாறு பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவது என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் மருத்துவ உபகரணங்களில் தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது என்பது குறித்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது.

இந்த தீத்தடுப்பு ஒத்திகையில் உதவி மாவட்ட அலுவலர்கள் ராஜ், நட்டார் ஆனந்தி, மாவட்ட அலுவலர்கள் சகாயராஜ் (தெர்மல்நகர்), முனியசாமி (சிப்காட்) மற்றும் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்