அன்னவாசல்:
இலுப்பூர் சமாதானபுரம் பாண்டி கோவிலுக்கு சொந்தமான புளியமரம் ஒன்று கோவிலுக்கு அருகில் உள்ளது. இந்த புளிய மரத்தில் ஓட்டைக்குள் விஷப்பாம்பு புகுந்து விட்டதாக சிலர் அந்த புளியமர ஓட்டைக்குள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் புளியமரத்தில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதையறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்த தண்ணீரை பீ்ய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.