பழைய இரும்பு பொருட்கள் குடோனில் தீ விபத்து

பழைய இரும்பு பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-04-25 19:27 GMT

புதுக்கோட்டை அருகே சிவபுரத்தில் பழைய இரும்பு குடோன் ஒன்று உள்ளது. இதில் பழைய இரும்பு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த குடோனில் இருந்து கரும்புகை வெளிவந்தது. மேலும் தீ மளமளவென எரிய தொடங்கியது. இந்த தீ பரவி இரவில் கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். புதுக்கோட்டை, திருமயம், சிப்காட் உள்ளிட்ட 3 தீயணைப்பு நிலையத்திலிருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் விடிய, விடிய தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இந்த தீ விபத்தில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. குடோனில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் வேறு அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. இந்த தீ விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்