போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீ

திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-05-04 14:19 GMT

திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் தரைத்தளத்தில் மின்சார இணைப்பு மீட்டர்பெட்டி உள்ளது. நேற்று அந்த மின்சார மீட்டர் பெட்டியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனை பார்த்த போலீசார் அருகில் சென்று பார்த்தனர். அதற்குள் மின்சார மீட்டர் பெட்டி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக மீட்டர் பெட்டி தீ பிடித்து எரிந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்