செல்போன் கோபுரத்தில் திடீர் தீ

செல்போன் கோபுரத்தில் தீப்பிடித்தது.

Update: 2022-12-20 19:15 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பூக்கொல்லை பகுதியில் செல்போன் கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் இருந்த வயர்கள் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதனால் கோபுரத்தின் மேல் பகுதி வரை தீ பரவி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தது தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். செல்போன் கோபுரத்தில் திடீரென தீப்பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்