200 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தில் தீ

200 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தில் தீ பிடித்தது.

Update: 2023-04-16 19:03 GMT

காரையூர் அருகே சித்தூர் பாக்குறிச்சிபட்டியில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்த பொதுமக்கள் பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், பொன்னமராவதி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் வெப்பம் தாங்காமல் மரம் உராய்வின் காரணமாக தீப்பற்றியதா அல்லது மர்மநபர்கள் யாரேனும் தீ வைத்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்