தீ தொண்டு வார விழா
கடையநல்லூரில் தீ தொண்டு வார விழா கடைப்பிடிக்கப்பட்டது.
கடையநல்லூர்:
தீயணைப்பு துறையினரின் தீ தொண்டு வார விழாவையொட்டி கடையநல்லூர் நகர் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் பஸ் நிலையம், ெரயில் நிலையம் ஆகியவற்றில் தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். மேலும் கடையநல்லூர் பஸ்நிலையத்தில் பொது மக்களிடம் தீயணைப்பு நிலைய வீரர்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
நிகழ்ச்சியில் கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.