டீக்கடையில் தீ விபத்து

நெல்லை வண்ணார்பேட்டையில் டீக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-12-01 20:41 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு டீக்கடையில் நேற்று வாடிக்கையாளர்கள் பலர் டீ குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள சிலிண்டரில் இருந்து திடீரென கியாஸ் கசிந்து தீவிபத்து ஏற்பட்டது. உடனே வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நிலைய அலுவலர் ராஜா உத்தரவின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்