ராஜபாளையம்,
ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மலையில் அமைந்துள்ள கழுதகடவு பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீ ஏற்பட்டது. ஒரு பகுதியில் பற்றிய தீ காற்றின் வேகம் காரணமாக தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பல்வேறு இடங்களுக்கு வேகமாக பரவியது. மலையின் மேல் பகுதியில் எரியும் தீ சில சமயங்களில் குடியிருப்புகளை நோக்கி பரவுவதால் மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் விரைந்து தீயை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.