மதுரை செல்லூர் பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது, போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த மரம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது பற்றியது. மேலும், போலீஸ் வளாக சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களிலும் தீ பற்றியது. இதனை தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு, தீ அணைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.