தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2023-04-29 19:18 GMT

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.

தீவிபத்து

சிவகாசி அருகே உள்ள மேலதாயில்பட்டி கட்டணஞ்செவல் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 50). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று கழிவு பொருட்கள் வைத்திருந்த அறையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவகாசி தீயணைப்பு நிலையத்திலிருந்து 2 வண்டிகள், 2 தனியார் வண்டிகள் 3 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

ஆலை முன்பு திரண்டனர்

தீப்பெட்டி ஆலையில் இருந்து புகை அதிக அளவில் வெளியேறியதால் அக்கம்பக்கத்தினர் தீப்பெட்டி ஆலை முன்பு திரண்டனர். சம்பவ இடத்தினை சல்வார்பட்டி வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன், வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்து குறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் வெம்பக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்