நிதி நிறுவனத்தில் தீ விபத்து
திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
திருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் உள்ள நிதி நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் வீட்டு பத்திரங்கள், வாடிக்கையாளர்களின் கடன் பெற்ற விவரம், தவணை கட்டிய ரசீது மற்றும் கணினி, மேசை நாற்காலி, பிரிண்டர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.