தீயில் எரிந்து கூரை வீடு நாசம்

திருமங்கலக்குடியில் தீயில் எரிந்து கூரை வீடு நாசமடைந்தது

Update: 2023-03-13 20:46 GMT

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடி குறிச்சிமலை ஹாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் அன்வர்(வயது65). இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். நேற்று அதிகாலை 4 மணி அளவில் இவர்களின் வீடு தீப்பற்றி எரிந்தது. உடனே வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்து விட்டனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமடைந்து விட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் கருகி சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்