வணிக வளாகம் அருகில் தீ விபத்து
வணிக வளாகம் அருகில் தீ விபத்து ஏற்பட்டது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் திண்டுக்கல்-காரைக்குடி சாலை அண்ணா நகர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் கடைகள் வணிக வளாகங்கள், வீடுகள் சூழ்ந்த இடத்தின் மையப்பகுதியில் காலியாக கிடந்த இடத்தில் கருவேல மரங்கள் வளந்திருந்தன. அதில் திடீரென நேற்று மதியம் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. கருவேல மரங்கள் காய்ந்து இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கம் தீ பரவாமல் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அருகில் உள்ள இருசக்கர வாகன வணிக வளாகம் மற்றும் டயர் விற்பனை நிலையம் போன்றவைகள் தீ விபத்தில் இருந்து தப்பியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.