எடப்பாடி அருகே குடிசை தீயில் எரிந்து சேதம்
எடப்பாடி அருகே குடிசை தீயில் எரிந்து சேதம் அடைந்தது.
எடப்பாடி:
எடப்பாடி அருகே கோரணம்பட்டி கிராமம், ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமத்து. இவரது மனைவி இந்திரா (வயது 65), இவர்கள் அந்த பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மதியம் மாரியத்து வெளியே சென்று இருந்தார். இந்திரா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் வசித்த கூரை வீடு, திடீரென தீப்பிடித்து தொடங்கியது. காற்று பலமாக வீசியதால் தீ மள,மள குடிசை முழுவதும் பரவியது. இது குறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் வீடு முழுவதும் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த பொருட்களும் தீயில் கருகின. இந்த தீ விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்பு துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.