குமாரபாளையம் அருகே ஹார்டுவேர் கடையில் திடீர் தீ ரூ.7 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
குமாரபாளையம் அருகே ஹார்டுவேர் கடையில் திடீர் தீ ரூ.7 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்;
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே படைவீடு பேரூராட்சி பகுதியில் வசிப்பவர் ராமசாமி மகன் ரமேஷ் (வயது 45). இவர் அந்த பகுதியில் பெயிண்டு பைப் மற்றும் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் கடையில் வைக்கப்பட்டிருந்த துணியில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. கடை முழுவதும் தீ பரவியது. இதுகுறித்து ரமேஷ் வெப்படை போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். குமாரபாளையம், சங்ககிரி மற்றும் வெப்படை நிலைய தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் பிளாஸ்டிக் பைப் மற்றும் ஹார்டுவேர் உதிரி பாகங்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.