பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் வாசன். கால்நடை டாக்டர். இவருடைய விவசாய தோட்டம் பையர்நத்தம் முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ளது. அங்கு 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தார். தற்போது அரவைக்கு வெட்டும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கரும்பு தோட்டத்துக்கு தீ வைத்தனர். தீ பற்றி எரிந்ததை அறிந்த வாசன் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரகுபதி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.