தாளவாடி அருகே தமிழக -கர்நாடக வனப்பகுதியில் காட்டுத்தீ
தாளவாடி அருகே தமிழக- கர்நாடக வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது.
தாளவாடி
தாளவாடி அருகே தமிழக- கர்நாடக வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது.
வறட்சி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட 10 வனச்சரகங்களில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் செடி, கொடிகள், மரங்கள் காய்ந்து காணப்படுகின்றன. நீர் நிலைகள் வறண்டு உள்ளன. செடி, கொடிகள் காய்ந்து கிடப்பதால் வனப்பகுதியில் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்படுகின்றன. உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பச்சையான மரக்கிளைகளை வைத்து தீயை அணைத்து வருகின்றனர். எனினும் அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்டுத்தீ ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது.
காட்டுத்தீ
இந்த நிலையில் தாளவாடியை அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட எத்திக்குட்டை மலை அருகே உள்ள தமிழ- கர்நாடக வனப்பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ வனப்பகுதியில் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவி எரிந்தது. இரவு நேரம் என்பதாலும், அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தவித்தனர். இன்று (புதன்கிழமை) காலையில் காட்டுத்தீ ஏற்பட்ட வனப்பகுதிக்கு வனத்துறையினர் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.