ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி

வீடு கட்ட அனுமதி வழங்க தாமதம் ஏற்பட்டதால் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-02-24 18:04 GMT

வீடு கட்ட அனுமதி வழங்க தாமதம் ஏற்பட்டதால் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடு கட்ட அனுமதி வழங்க தாமதம்

தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி அம்மாபட்டியை சேர்ந்தவர் முருகாசாமி (வயது 65). விவசாயி. இவர் தனது சொந்த நிலத்தில் வீடுகட்ட முடிவு செய்தார். அதற்கு கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் கட்டிட அனுமதி கேட்டு கடந்த ஆகஸ்டு மாதம் விண்ணப்பித்தார். அதன்பின்னர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் ஆலோசைனை படி கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆகியோரிடம் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை மாவட்ட ஊராட்சி துணை இயக்குனருக்கு அனுப்பியதாக ஆணையாளர் தெரிவித்தார். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முருகாசாமி மற்றும் தனது உறவினர் பகவதியம்மாள் மற்றும் பூமதி ஆகியோருடன் நேற்று தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கட்டிட அனுமதிக்கு அனுமதிக்கு ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் லஞ்சம் கேட்பதாக வாசகங்கள் எழுதிய பதாகையை கையில் வைத்திருந்தனர்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது முருகாசாமி தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்த போலீசார் பாட்டிலை பிடிங்கி எறிந்து விட்டு அவருடைய உடலில் தண்ணீர் ஊற்றினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் போலீசார் அவரை அழைத்துக் கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து முருகாசாமி போராட்டத்தை கைவிட்டு சென்றார்.


Tags:    

மேலும் செய்திகள்