குப்பைக்கு ைவத்த தீ ரேஷன் கடையில் பிடித்து 600 சாக்குகள் எரிந்து நாச

பல்லடம் அருகே குப்பைக்கு ைவத்த தீ ரேஷன் கடையில் பிடித்து 600 சாக்குகள் எரிந்து நாசமானது.

Update: 2023-02-16 17:16 GMT

பல்லடம் அருகே குப்பைக்கு ைவத்த தீ ரேஷன் கடையில் பிடித்து 600 சாக்குகள் எரிந்து நாசமானது.

குப்பைக்கு தீ

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டில் ரேஷன் கடை உள்ளது.இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பொருட்கள் இருப்பு வைக்கும் அறை உள்ளது.

அந்த ரேஷன் கடைக்கு பின்புறம் மயான பகுதி உள்ளது. அங்கு குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமாலை அந்த குப்பைகளுக்கு சிலர் தீ வைத்துள்ளனர்.

ரேஷன் கடையில் பிடித்தது

குப்பைகளில் பற்றிய தீ மளமளவென எரிந்து ரேஷன் கடை பொருட்கள் இருப்பு வைக்கும் அறைக்கும் பரவியது.

இந்தத் திடீர் தீ விபத்தை கண்ட ரேஷன் கடை ஊழியர் தர்மராஜ் உடனடியாக பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதற்குள் அக்கம்,பக்கம் இருந்தவர்கள். ஓடிவந்து உதவி செய்தனர். இதனால் இருப்பு வைக்கப்பட்ட அறையில் இருந்த பொருட்கள் பத்திரமாக மீட்கப்பட்டது.

600 சாக்குகள் எரிந்தன

இதற்கிடையே அங்கு இருந்த அரிசி சாக்குகள் 350, பிளாஸ்டிக் சாக்குகள் 250 உள்ளிட்டவை தீயில் எரிந்து சாம்பல் ஆகின. அதிர்ஷ்டவசமாக நியாய விலைக்கடையிலிருந்த அரிசி, பருப்பு,மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்கள் இந்த தீ விபத்தில் இருந்து தப்பியது. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்