நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தில் விவசாயி ஒருவரது வீட்டின் அருகே கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் போர் மற்றும் தீவனப்புல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று அவற்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கொளுந்து விட்டு எரிந்த தீயை பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். ஆனால் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் மற்றும் தீவனப்புல் ஆகியவை தீயில் எரிந்து சாம்பலானது.
இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ வைத்த மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.