ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் செண்பக நகர் பகுதியில் காளியம்மன் ஊருணி உள்ளது. இந்த ஊருணி பகுதியில் ஏராளமான காட்டு கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இந்தநிலையில் இந்த ஊருணியின் மேல் பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பிகள் உரசி திடீரென்று காட்டு கருவேல மரங்களில் தீப்பற்றியது. இந்த தீ மளமளவென பரவி காட்டு கருவேல மரங்கள் அனைத்தும் எரிந்தன. இதுகுறித்து நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன் உடனடியாக தகவல் தெரிவித்தார். ராமநாதபுரம் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.