அரூரில் கடந்த மாதம் விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.5¼ லட்சம் அபராதம்
அரூர்:
அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில் கடந்த மாதம் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை செய்யப்பட்டது. மொத்தம் 334 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, அதிக பாரம் ஏற்றியது, ஏர் ஹாரன்கள் பொருத்தியது, வாகனங்களை அதிவேகமாக இயக்கியது, வரி செலுத்தாதது மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது என 131 வாகனங்களுக்கு ரூ.5 லட்சத்து 37 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணங்கள் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.