குழந்தை தொழிலாளியை பணிக்கு அமர்த்திய ஜவுளி நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

குழந்தை தொழிலாளியை பணிக்கு அமர்த்திய ஜவுளி நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

Update: 2022-10-10 18:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சைல்டு லைன் உறுப்பினர்கள் மற்றும் போலீசார் இணைந்து குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுகிறார்களா? என அவ்வப்போது கூட்டாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செங்கோடு பகுதியில் இதுபோன்ற ஆய்வின்போது குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்திய ஜவுளி நிறுவனத்தின் மீது நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜவுளி நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். எந்தவொரு நிறுவனத்திலும் குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணியில் ஈடுபடுத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்