சாத்தனூரில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம்

சாத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2022-08-20 15:50 GMT

தண்டராம்பட்டு

சாத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மத்திய கூட்டுறவு வங்கியின் தண்டராம்பட்டு கிளை சார்பில் சாத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சாத்தனூர் கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.எஸ்.ரவிச்சந்திரன், செயலாளர் குப்புசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

கிளை மேலாளர் சவுந்தரராஜன் முகாமை தொடங்கி வைத்து மத்திய கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் ஊனமுற்றோர் மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் கைம்பெண்கள் கடன் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

முகாமில் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் சம்பத் கலந்து கொண்டு வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் காப்பீடு திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். முகாமில் பயனாளிகளிடமிருந்து கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது மேலும் ஆதரவற்ற விதவைகளுக்கு கடனுதவிகளும் வழங்கப்பட்டன முன்னதாக வங்கிப் பணியாளர் சி. நிர்மல் ராஜ் வரவேற்று பேசினார். முகாமில் மகளிர் சுயஉதவி குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்